;
Athirady Tamil News

ஜனாதிபதி செயலணியில் படையினருடன் இணைந்து செயற்படுவது எமக்கு பாதிப்பு; கூட்டமைப்பினரின் நிராகரிப்புக் குறித்து சி.வி. பதில்..!!

0

ஜனா­தி­ப­தியின் செய­ல­ணியில் படை­ யி­ன­ருடன் சேர்ந்து செயற்­ப­டு­வது எமக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

செய­ல­ணியால் செயற்­ப­டுத்த இருக்கும் திட்­டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் யாவும் அர­சாங்­கத்தால் ஒருதலைப்­பட்­ச­மாக தயாரிக்கப்பட்டவை.

அவற்றை வேண்­டு­மெனில் அவர்­களே செயற்­ப­டுத்த விட்­டு­விட்டு நாம் ஒதுங்­கி­யி­ருந்து அர­சியல் தீர்வை அத்­தி­யா­வ­சி­யப்­ப­டுத்­து­வதே தற்­போ­தைய உசி­த­மான செயற்­பாடு என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

சம்­பந்­தனின் கருத்­துக்கு பலம் சேர்க் கவே ஜனா­தி­ப­தியின் செய­ல­ணியில் 16 பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள் பங்­கேற்­காமல் அரசியல் தீர்வை உடனே தர வேண்­டு­மென ஒன்­று­சேர்ந்து வலி­யு­றுத்த வேண்­டு­மென்றும் கோரி­யி­ருந்தேன். ஆனால், அந்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி செய­ல­ணியில் கலந்­து­கொள்­ளா­விட்டால் அர­சியல் தீர்வின் அத்­தி­யா­வ­சி­யத்தை வலி­யு­றுத்தக் கூடிய நிலைமை ஏற்­படும் அத்­துடன் பல நன்­மை­க­ளையும் அடை­ய­மு­டியும் என்றும் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வாராந்த கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே முத­ல­மைச்சர் இந்த விடயம் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கேள்வி: ஜனா­தி­பதி செய­ல­ணியில் அங்கம் வகிக்க உங்­க­ளையும் உங்கள் பிர­தம செய­லா­ள­ரையும் மட்டும் அழைத்­தி­ருந்தார் மாண்­பு­மிகு ஜனா­தி­பதி அவர்கள்.

நீங்கள் காரணம் காட்டி அச் செய­ல­ணியின் முதற் கூட்­டத்தைப் பகிஷ்­க­ரித்­தீர்கள். உங்கள் கடி­தத்தில் வட கிழக்கு மாகாண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகா­ண­சபை அமைச்­சர்­களும் இடம் பெறாமை பற்றிக் குறை கூறி­யி­ருந்­தீர்கள்.

இப்­பொ­ழுது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மட்டும் ஜனா­தி­பதி அடுத்த கூட்­டத்­திற்கு அழைத்­துள்ளார். உங்கள் அமைச்­சர்கள் கூப்பிடப்பட­வில்லை. இக் கூட்­டத்­திற்கு அழைப்பு உங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டதா? இவ்­வா­றான கூட்­டத்தில் கலந்து கொள்­ளாமை என்ன நன்­மையைத் தரும்?

பதில்: சம்­பந்தன் அவர்கள் அண்­மைக்­கா­லங்­களில் அர­சியல் தீர்வை உடனே வழங்க வேண்டும் என்ற கருத்தை வலி­யு­றுத்தி வரு­கின்றார்.

அத்­துடன் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் அவரை திரு­கோ­ண­ம­லையில் சந்­தித்த போது வேலை­வாய்ப்புப் பெற்றுக் கொடுப்­பது தனக்கு முக்­கி­ய­மல்ல என்றும் அர­சியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்­பதே தமது தலை­யாய கடன் என்ற முறையில் கூறி­யி­ருந்தார்.

இந்தக் கருத்தைக் கிளி­நொச்சி கூட்­ட­மொன்­றிலுந் திரும்பக் கூறி­யி­ருந்தார். அதி­லி­ருந்து அர­சியல் தீர்­வுக்கு அவர் கொடுத்து வந்­தி­ருக்கும் முக்­கி­யத்­துவம் புல­னா­கின்­றது.

அவரின் அந்தக் கருத்­துக்குப் பலம் ஊட்­டு­வ­தா­கவே ஜனா­தி­பதி செய­ல­ணியில் 16 பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள் பங்­கேற்­காமல் அர­சியல் தீர்வை உடனே தர வேண்டும் என்று சேர்ந்து கோரு­வது எமக்கு அர­சியல் ரீதி­யாகப் பலன் அளிக்கும் என்று நேற்­றைக்கு முந்­திய தினம் கௌரவ சம்­பந்தன் அவர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்தேன்.

ஆனால் அந்தக் கருத்தை எமது பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள் ஏற்றுக் கொள்­ள­வில்லை. தனிப்­பட்ட அர­சியல் செல்­வாக்­கையும் பணத்தையுந் தான் அவர்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

மக்­களின் சுதந்­திர வாழ்­வையும் நீண்­ட­கால அர­சியல்த் தீர்­வையும் அவர்கள் நாட முனை­வ­தாகத் தெரி­ய­வில்லை.

அர­சியல் தீர்வைப் பெற, எமது ஒற்­று­மையை எடுத்துக் காட்ட, செய­ல­ணிக்குச் செல்­லாது அர­சியல் தீர்வு முதலில், பொரு­ளா­தார நன்­மைகள் அதன்பின் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரே குரலில் கூற முன்­வந்­தி­ருந்­தார்­க­ளே­யானால் அர­சாங்கம் அதன் பொருட்­டான சர்­வ­தேச கண்டனங்­க­ளுக்குப் பொறுப்புக் கூற வேண்டி வந்­தி­ருக்கும்.

அர­சியல் தீர்­வுக்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருப்­பார்கள். அத்­துடன் குறித்த செய­லணி வேலை­களை நடாத்த நாம் அதில் பங்­கு­பற்ற வேண்டும் என்று அவ­சி­ய­மில்லை.

அத்­துடன் இரா­ணு­வத்­தி­ன­ருடன் சேர்ந்து தான் நாங்கள் இந்த செய­ல­ணியில் பங்­கு­பற்றி நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது.

எப்­ப­டியும் எமக்கு உதவி புரி­கின்றோம் என்று அர­சாங்கம் உல­குக்கு எடுத்துக் காட்ட வேண்­டி­யுள்­ளது. சேரா­விட்­டாலும் ஜனா­தி­பதி அவர்கள் குறித்த செய­ல­ணியை நடத்­தியே செல்வார்.

ஆனால் நாம் எமது ஒற்­று­மையைக் காட்ட அர­சியல் தீர்வை வலி­யு­றுத்த இது ஒரு நல்ல சந்­தர்ப்பம். எனக்கு செய­ல­ணியின் செய­லாளர் திரு.சிவ­ஞா­ன­சோதி அவர்கள் மாண்பு மிகு ஜனா­தி­ப­தியின் அழைப்பை மீண்டும் வலி­யு­றுத்தி அடுத்த கூட்­டத்தில் சமூ­க­ம­ளிக்­கு­மாறு வேண்­டி­யுள்ளார். அது பரி­சீ­ல­னையில் உள்­ளது.

கூட்­டத்தில் கலந்து கொள்­ளாமை

1. அர­சியல் தீர்வின் அத்­தி­யா­வ­சி­யத்தை வலி­யு­றுத்தும்

2. பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு அர­சாங்கம் கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை அர­சியல் தீர்­வுக்குக் கொடுக்­க­வில்லை என்­பதை உலகறியச் செய்யும்.

3. சேர்ந்து தமிழ் பிர­தி­நி­திகள் இயங்­கினால் எமது ஒற்­றுமை வௌிப்­படும். நாங்கள் அர­சாங்­கத்தால் வீசப்­படும் எலும்புத் துண்­டு­க­ளுக்­காக நாக்கை நீட்டிக் கொண்டு ஓடிச் செல்­கின்ற இன­மல்ல என்­பதை நாம் சேர்ந்து வலி­யு­றுத்­தலாம்.

4. இரா­ணு­வத்­தினர் மக்கள் முன்­னேற்­றத்தில் ஈடு­ப­டு­தலைக் கண்­டிக்­கலாம்.

5. செய­லணி கூட்­டத்­திற்குப் போகா­மலே எமது மக்­களின் பொரு­ளா­தார விருத்­தியை உறுதி செய்­யலாம். அவர்கள் செய்­வதில் தவ­றுகள் இருந்தால் சுட்டிக் காட்­டலாம்.

சிலர் மகா­வலி காணி அப­க­ரிப்பைத் தடுக்க இதில் சேர வேண்டும் என்­கின்­றார்கள். பாரா­ளு­மன்­றத்தில் எமது உறுப்­பி­னர்கள் செய்ய முடி­யா­ததை செய­ல­ணியில் சேர்ந்து செய்ய முடியும் என்று இவர்கள் கூறு­வது விந்­தை­யாக இருக்­கின்­றது.

முன்னர் வழி­ந­டத்தல் குழுவில் சேர்ந்த போது எமது அர­சியல்க் கருத்­துக்­களை நாம் வலி­யு­றுத்திப் பேச­வில்லை. எமக்­கென சில அர­சியல் சிபார்­சுகள் இருப்­ப­தா­கவும் நாம் கூற­வில்லை.

ஈற்றில் அர­சாங்­கத்தின் கருத்­துப்­ப­டியே எல்லாம் நடந்­தேறி வரு­கின்­றன. அதற்கு எம்­ம­வர்கள் ஒத்­து­ழைத்து வரு­கின்­றார்கள்.

ஜனா­தி­பதி செய­ல­ணியில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முப்­ப­டை­யி­ன­ரு­டனுஞ் சேர்ந்து ஒரே மேசையைச் சுற்றிக் கூடி­யி­ருந்து வடக்கு கிழக்கின் அபி­வி­ருத்திப் பணி­களில் ஈடு­பட்டுக் கொண்டு படை­யி­னர்­க­ளுக்­கெ­தி­ரான யுத்த குற்­றங்கள் பற்றி சர்­வ­தேச அரங்­கு­களில் குறிப்­பாக ஜெனி­வாவில் பேசப் போகின்­றார்­களா?

அப்­படிப் பேச எத்­த­னித்தால் இப்­பொ­ழுது தான் படை­யி­ன­ருடன் பொரு­ளா­தார விருத்தி சம்­பந்­த­மாகச் சேர்ந்து விட்­டீர்­களே் இனி ஏன் யுத்த குற்ற விசா­ரணை? அவர்களைக் கொண்டே உங்கள் இடங்களை அபிவிருத்தி செய்யுங்களே? என்று சர்வதேச ரீதியாகக் கேட்கப் போகின்றார்கள்.

படையினரைச் சேர்க்காவிட்டால் மட்டுந்தான் நாங்கள் செயலணியில் செயல்படுவோம் என்று கூட இவர்கள் கூறுவார்களோ தெரியாது. அதற்கு நெஞ்சுரம் வேண்டும்.

செயலணியில் படையினருடன் சேர்ந்து செயல்படுவது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். செயலணியால் செயல்படுத்த இருக்குந் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் யாவையும் அரசாங்கத்தால் ஒருதலைப்பட்சமாகத் தயாரிக்கப்பட்டவை.

அவற்றை வேண்டுமெனில் அவர்களே செயல்படுத்த விட்டு விட்டு நாம் ஒதுங்கி இருந்து அரசியல் தீர்வை அத்தியாவசியப்படுத்துவதே தற்போதைய உசிதமான செயற்பாடு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 3 =

*