;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை அடிபணிய வைத்த பாதுகாப்பு படை..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்துக்காக இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயிற்சி அளித்து பயங்கரவாத இயக்கத்துடன் இணைத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில் இருந்து 4 பேரை அல்-பத்ர் இயக்கத்தில் இணைத்து, அவர்களை 3 பயங்கரவாதிகள் அழைத்து செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, காட்டுப்பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகள், புதிதாக இணைந்த 4 பேரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். மேலும், பலத்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 4 பேர் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தனர்.

மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*