;
Athirady Tamil News

வவுனியாவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும்..!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும் இன்று (26.08) காலை 11மணியளவில் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் வடக்கு மீள் குடியேற்றம் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட சுதந்திரக் கட்சியின் தலைவராக கே.கே.காதர் மஸ்தான், உபதலைவர்களாக நியூட்டன் சில்வா, டி.யே.பெனடிக், வெள்ளைசாமி மகேந்திரன், கனகராஜ், எஸ்.ஏ.தாஜீன் ஆகியோரும், செயலாளராக குமாரசாமி மற்றும் உப செயலாளர்களாக லோகேஸ்வரன், ராகினி, விமலசிறி, சரத் வீரவர்த்தன, நிஸார்தீன், சுரேஸ், பொருளாளராக குமாரி தர்மதாஸ ஆகியோர் வவுனியா தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

இந் நிகழ்வில் நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் கிஸ்புல்லா மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தபோதும் கலந்துகொண்டிருக்கவில்லை.

நிகழ்வில் உரையாற்றிய வடக்க அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.கே.மஸ்தான்
வவுனியாவில் எமது கட்சி தலைமை கட்சியின் பொறுப்பை என்னிடம் வழங்கிய போது விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே கட்சியில் இருந்தனர். அந்தவகையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற ஒரு கட்சியாக உயர்த்தியுள்ளேன் அத்துடன் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 18 உறுப்பினர்கள் எமது கட்சி சார்பாக வெற்றிபெற்றுள்ளனர் என குறிப்பிட்டார்.

சிறிலங்க சுதந்திரக்கட்சியின் செயற்குழு கூட்டத்தின் முடிவில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் முல்லைத்தீவில் ஏற்படுத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் மிள்குடியேற்ற அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் பதிலளித்திருந்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + nine =

*