;
Athirady Tamil News

மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி..!!

0

மட்டக்களப்பு , பாசிக்குடாவில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் இளைஞன் ஒருவர் பலியாகியதுடன் மற்றொரு இளைஞன் கால் ஒன்று உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (25) இடம்பெற்ற இச்சம்பவத்தில் செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த அஹமட் லெப்பை முஹம்மத் அஸிம் என்ற 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அதே இடத்தைச் சேர்ந்த 17 வயதுடைய லத்தீப் முஹம்மத் நிப்றாஸ் என்பவர் ஒரு கால் உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

நண்பர்களான இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் பாசிக்குடா சென்று திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மருங்கில் இருந்த மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் விபத்துச் இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − four =

*