;
Athirady Tamil News

இங்கிலாந்து பொலிசாருக்கு பார்சலில் வந்த பாம்பு..!!

0

இங்கிலாந்தில் Newcastle காவல் நிலையத்திற்கு வந்த பார்சல் பெட்டியில் 6 அடி நீள பாம்பு இருந்ததால், பொலிஸார் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்தின் Newcastle பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் தன்னுடைய நண்பருடன் மிகப்பெரிய வடிவிலான பெட்டியினை கொண்டு வந்துள்ளார். அதில் ஆங்காங்கே ஏராளமான சிறிய துளைகளும் இடப்பட்டிருந்தது.

அதனை பொலிஸ் ஒருவர் வாங்கி திறந்து பார்த்த பொழுது, உள்ளே 6 அடி நீளத்தில் வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்

ஆரம்பத்தில், விஷமுள்ள பாம்பாக இருக்குமோ என நினைத்து பொலிஸார் அனைவரும் அங்கும் இங்கும் ஓட, அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் அது விஷமில்லாத பாம்பு வகையை சார்ந்தது என்பதை அறிந்த பொலிஸார், பெட்டியை கொண்டு வந்த பெண்ணிடம் பாம்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்

பகுதியில் உள்ள தெருவில் மத்திய உணவிற்காக நடந்து செல்லும்போது, இந்த பாம்பை பார்த்தேன். எங்கு செல்வதென தெரியாமல் அது தவித்து கொண்டிருந்தது. உடனே அதனை ஒரு பெட்டியில் எடுத்து போட்டு, காற்று செல்வதற்காக பெட்டியில் ஓட்டை மட்டும் இட்டிருந்தேன் என அந்த பெண், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து பேசிய பொலிஸார், அல்பினோ பாம்புகள் விஷமில்லாத வகையை சார்ந்ததால்,அவற்றை பெரும்பாலானோர் வீடுகளில் செல்ல பிராணிகளை போல வளர்த்து வருகின்றனர்.

இதனை கட்டாயம் அப்பகுதியில் உள்ள யாரோ ஒருவர் தான் செல்ல பிராணியாக வளர்த்திருக்க வேண்டும். நிச்சயமாக இந்த பாம்பின் உரிமையாளரை கண்டுபிடித்து விரைவில் ஒப்படைப்போம் என தெரிவித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − fifteen =

*