;
Athirady Tamil News

தீப்பிடித்து பாதி உடல் எறிந்தவாறே ஓடி வந்த சிறுமி! அதிர்ச்சியடைந்த தாய்…!!

0

அமெரிக்காவில் ஃபயர் சேலஞ்ச் செய்த சிறுமி, பாதி உடல் எறிந்த நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் Michigan பகுதியை சேர்ந்தவர் Brandi Owens. இவருக்கு 12 வயதில் Timiyah Landers என்ற மகள் உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று Brandi வீட்டின் கீழ்தளத்தில் கேக் செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென மாடியிலிருந்து மகள் அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு, வேகமாக திரும்பி பார்த்துள்ளார். அப்போது பாதி உடல் தீயில் எரிந்த நிலையில், அலறியடித்துக்கொண்டு Timiyah வேகமாக அவளது அம்மாவை நோக்கி ஓடி வந்துள்ளாள்

மகளின் உடலில் தீ பற்றி எரிவதை பார்த்து பதறியடித்த அம்மா, வேகமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்குள் சத்தம் கேட்டு ஓடிவந்த Brandi-ன் நண்பர் Marquell Sholar, விரைந்து சிறுமியை பாத்டப்பில் தள்ளிவிட்டுள்ளார்

இதற்கிடையில் Brandi, தீயினுள் கையை விட்டு சிறுமியின் உடைகளை களைந்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து சிறுமியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுமி உடலில் 49 சதவிகித காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்

பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில், Timiyah அவளுடைய செல்போனில் யூடியூபை பார்த்து, ஃபயர் சேலஞ்ச் செய்ய முற்பட்டதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்திலிருந்து என்னுடைய மகள் மீண்டு வந்ததும், நிச்சயமாக அவளை அதிகம் செல்போன் உபயோகிக்க அனுமதிக்க மாட்டேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*