;
Athirady Tamil News

உரும்பிராய் பகுதி சனசமூக நிலையங்களுக்கான பல்வேறு உதவிகள்..!! (படங்கள்)

0

உரும்பிராய் பகுதி சனசமூக நிலையங்களுக்கான பல்வேறு உதவிகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் உரும்பிராய் பகுதியில் உள்ள 03 சனசமூக நிலையங்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் இன்று 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை உரும்பிராயில் இடம்பெற்றன.

உரும்பிராய் மேற்கு, அன்னங்கை இந்து இளைஞர் சனசமூக நிலையச்சிறார்களின் தேவைகாக ரூ. 40,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்திற்கு ரூ.40,000/= பெறுமதியான பிளாஸ்ரிக் கதிரைகளும், உரும்பிராய் மேற்கு திருக்குமரன் சனசமூக நிலையத்திற்கு ரூ.40,000/= பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் பிளாஸ்ரிக் நீர்த்தாங்கி என்பனவும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது வடமாகாணசபை உறுப்பினருடன், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபைத்தவிசாளர் தி.நிரோஷ், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபையின் உரும்பிராய் பகுதி வட்டாரங்களைச்சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களான சி.அகீபன் மற்றும் செல்வி.ச.வேணுகா மற்றும் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினரான ஞா.கிஷோர் மற்றும் சனசமூக நிலைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன், பிரதேசத்தின் தேவைகள் பற்றி பொதுமக்களுடன் கலந்துரையாடல்களும் இடம்பெற்றந.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − sixteen =

*