;
Athirady Tamil News

மவுண்ட்பேட்டன் பிரபு குண்டு வைத்து கொல்லப்பட்டார் : 27-8-1979..!!

0

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி பிறந்தார். பர்மாவின் முதலாவது கோமகன் மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் இருந்தவர்.

மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும்போது ஐரிஷ் குடியரசு ராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்க வைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் 3 பேர் இந்த குண்டு வெடிப்பில் பலியானார்கள்.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1881 – புளோரிடாவில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் 700 பேருக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

* 1883 – இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலை வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36 ஆயிரம் பேர் பலியானார்கள்

* 1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

* 1896 – ஆங்கிலோ- சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் 19 நிமிடத்தில் (09:02- 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.

* 1916 – முதலாம் உலகப் போர்: ருமேனியா, ஆஸ்திரியா- ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர் ஜெர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.

* 1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.

* 1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.

* 1952 – லக்சம்பேர்க்கில் மேற்கு ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நஷ்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நஷ்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.

* 1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமலானது.

* 1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.

* 1975 – போர்ச்சுக்கீசிய திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − fourteen =

*