;
Athirady Tamil News

சிகாகோவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பலி..!!

0

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் புறநகர் பகுதியான லிட்டில் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ பற்றியது. இதில் இரண்டு வீடுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 18 =

*