;
Athirady Tamil News

75 அடி பள்ளத்தில் குடை சாய்ந்த பேருந்து – ஒருவர் பலி..!! (வீடியோ)

0

பதுளை, அலுகொல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று குடை சாய்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 34 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்து 75 அடி ஆழமான பகுதியிலேயே குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து இன்று (27) காலை 8 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ​

குறித்த விபத்தில் 13 வயது குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − three =

*