;
Athirady Tamil News

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் யாழில் கையளிப்பு..!!

0

யாழ்ப்பாணம், பருத்தித்துறை – கரம்பன் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

´தஹம் பஹன´ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ் அனுசரணையில் இந்த வீடுகள் அண்மையில் யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியினால் மதகுருமாரின் ஆசீர்வாதத்துடன் வீட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ´தஹம் பஹன´ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ், மதகுருமார்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 1 =

*