;
Athirady Tamil News

வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது..!!

0

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரிடமிருந்து 100கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜ.எம். நபீம் தலைமையில் சென்றவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான சிவகுமார் றெஜி 22வயதுடைய இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் 100கிராம் கேரளா கஞ்சாவினை பொதி செய்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த வாரத்திலும் நெளுக்குளம் பகுதியில் வைத்து மரை இறைச்சி பழுதடைந்த உணவுகளுடன் வான் ஒன்றில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டபோது இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 14 =

*