;
Athirady Tamil News

மின்னேரிய தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக மூடப்பட்டது..!!

0

மின்னேரிய தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று இரவு இனம் தெரியாத குழு ஒன்று மின்னேரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிவிட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை காப்பாற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கும் அதிகமான நபர்கள் இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தாக்குதலில் 4 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிப்பத்திரம் இல்லாமால் மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருந்த ஒருவரையே இவ்வாறு காப்பாற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*