;
Athirady Tamil News

மார்த்தாண்டம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை..!!

0

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளத்தைச் சேர்ந்தவர் பிபின் (வயது 26). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி அனிதா (23). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒரு வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 23-ந் தேதியும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அனிதா, கணவரிடம் கோபித்துக் கொண்டு பக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். அங்கு மன வேதனையில் இருந்த அவர் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

உடல் கருகி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனிதாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eleven =

*