;
Athirady Tamil News

அரியாலை காந்தி விளையாட்டுக்கழகத்துக்கு சீருடைகள் வழங்கி வைப்பு..!!

0

அரியாலை காந்தி விளையாட்டுக்கழகத்துக்கு சீருடைகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் 2018ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் அரியாலை காந்தி விளையாட்டுக்கழகத்துக்கு ரூ.40,000/= பெறுமதியான விளையாட்டுச்சீருடைகள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனால் விளையாட்டுக்கழக நிர்வாகிகளிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று 27.08.2018 திங்கட்கிழமை பி.ப 03 மணியளவில் யாழ்.மாநகரசபையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்.மாநகரசபையின் பிரதிமேயரும் தற்காலிக முதல்வருமான து.ஈசன், யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் மற்றும் கழக நிர்வாகிகள், மாநகரசபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*