;
Athirady Tamil News

புதையல் அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட எட்டு பேர் கைது..!!

0

அகுணுகெலபெஸ்ஸ, ஜதுர பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் தோட்டம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் தெனியாய மற்றும் அகுணுகெலபெஸ்ஸ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அகுணுகெலபெஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 6 =

*