;
Athirady Tamil News

ஜன்னல் கம்பிகளுக்கிடையில் தலை சிக்கி தொங்கிக் கொண்டிருந்த குழந்தை: திடுக் வீடியோ..!!

0

சீனாவில் ஜன்னல் கம்பிகளுக்கிடையில் தலை சிக்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை தீயணைக்கும் வீரர்கள் மீட்ட வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

னாவின் Guangdong பகுதியில் ஒரு தாய் தனது குழந்தையை விட்டு விட்டு கீழே சென்று ஒரு பார்சலை வாங்கி வரச் செல்வதற்குள் தாயை தேடிச்சென்ற அந்த குழந்தை ஜன்னல் கம்பிகளுக்கிடையே விழுந்ததில் அதன் தலை மட்டும் கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொண்டது.

ஆறாவது மாடியிலிருந்து அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த நான்கு வயது பெண் குழந்தையைக் கண்ட பொது மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்க விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொது மக்கள் உதவியுடன் அந்த குழந்தையை மீட்டனர்.

பொது மக்களில் ஒருவர் கஷ்டப்பட்டு அந்த குழந்தையை பிடித்துக் கொள்ள, தீயணைப்பு வீரர் ஒருவர் கம்பியை வெட்டும் கருவி ஒன்றின் உதவியால் ஜன்னல் கம்பிகளை வெட்ட இன்னொருவரும் சேர்ந்து அந்த குழந்தையை பத்திரமாக தூக்கி எடுத்தனர்.

அரை மணி நேரமாக தொங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.சீனாவில் வீடுகளில் கவனிப்பாரின்றி குழந்தையை விட்டுச் செல்லும் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

https://adclick.g.doubleclick.net/pcs/click?xai=AKAOjsvq-0kJzgLFVA7mF_W7paDgyzogaMdaRVAYMTKwHoUS42HeRSqwo1wezCQYigQsfNJWc71agtXyeqVoYOQmKH06izxKDBOKdfAD4D-JusznWh2ugo55FEwt2MLwJZ0dSkJzhoZXKQ&sai=AMfl-YT2SmSVew7qxh71Iu6h8L0oKgnL5kRArPBmlzMvUtxaPd5T7p0I9g7hyfmHcbh2abtj3yD9aTyqCqUlNvjXa8Y8OUzp9PidxgdlHjvCjl4l&sig=Cg0ArKJSzEgTdA5i_d1WEAE&urlfix=1&adurl=https://www.visa.com.lk/pay-with-visa/featured-technologies/visa-paywave.html%3Fdclid%3DCjgKEAjwwo7cBRCLhNfy65vf8BkSJADVY00r3fBNKb2Zpy4UpYhlnJxuz5rbam2Hh45n8swnVyGJqPD_BwE

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*