;
Athirady Tamil News

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு?..!!

0

டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரமுகர்களுடன் உரையாடுகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் அருண் குமார் நேற்று தெரிவித்தார். அவரிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “பல்வேறு அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்று கூறினார். ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*