;
Athirady Tamil News

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு..!! (படங்கள்)

0

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. குறித்த குருதி சுத்திகரிப்பு நிலையம் மத்திய அரசு மற்றும் மாகாண அரசின் நிதி பங்களிப்புடன் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இன்று மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது, குறித்த குருதி சுத்திகரிப்பு நிலையத்தினை வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் குருதி சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் கருத்த தெரிவித்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்ற மருத்துவர் இன்மை தொடர்பில் கருத்து தெரிவித்தார். குறித்த பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் தீர்வு எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 2 =

*