;
Athirady Tamil News

குழந்தை உயிரிழப்பு – கலஹாவில் பதற்றம் – பொலிஸார் குவிப்பு..!! (வீடியோ)

0

கண்டி, கலஹா வைத்தியசாலையில் பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலஹா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று இறந்த சம்பவம் தொடர்பில் தற்போது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குழந்தை ஒன்றை வைத்தியசாலை அனுமதிக்க தாமதம் ஏற்பட்டதில் குறித்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து இவ்வாறு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

700 இற்கு அதிகமாக நபர்கள் அவ்விடத்தில் கூடி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − one =

*