மகாவலி திட்ட செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி – ஜனாதிபதிக்கு மகஜர்..!!

மகாவலி அபிவிருத்தி திட்ட செயற்பாடுகள் தொடர்பாக தமது அதிருப்தியை வௌிப்படுத்திய முல்லைத்தீவு மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இந்த மகஜரை மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை, மாவட்ட செயலரிடம் இன்று (28) கையளித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும், ஜனாதிபதி நிறைவாக எமது கோரிக்கைகளை ஏற்று நியாயமான தீர்வினை வழங்குவதனூடாக சமாதானம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உரமூட்டுமாறு மகஜரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.