;
Athirady Tamil News

111 பேருடன் இந்திய விமானம் கடத்தல்- 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் விடுதலை செய்தது டெல்லி ஐகோர்ட்..!!

0

பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு காலிஸ்தான் தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த கோரிக்கைக்காக கடந்த 1981-ம் ஆண்டு பிந்த்ரன் வாலேயின் தல்கல்சா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 111 பயணிகளுடன் பாகிஸ்தானின் லாகூருக்கு கடத்தி சென்றனர். 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.

இந்த வழக்கில் 5 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் தேஜிந்தர்பால்சிங், சத்னம் சிங் ஆகியோர் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.

கைதான 2 பேருக்கும் பாகிஸ்தான் கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து 1997-ம் ஆண்டு தேஜிந்தர் பால்சிங்கும், 1999-ம் ஆண்டு சத்னம் சிங்கும் இந்தியா திரும்பினர்.

அவர்கள் மீது டெல்லி கோர்ட்டிலும் விமான கடத்தல் வழக்கு தொடரப்பட்டது. தாங்கள் ஏற்கனவே பாகிஸ்தானில் தண்டனை அனுபவித்து விட்டதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒரே குற்றச்சாட்டுக்கு இரு முறை தண்டனை அனுபவிக்க முடியாது என்று வாதிட்டனர்.

இந்த வழக்கை டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி அஜய்பாண்டே விசாரித்து இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இருவரும் பாகிஸ்தானில் தண்டனை அனுபவித்து விட்டதாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் டெல்லி போலீசாரால் நிரூபிக்கப்படாததாலும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + three =

*