;
Athirady Tamil News

வியட்நாம் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..!!

0

ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா – வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாமை தொடர்ந்து 29-ம் தேதி (நாளை) கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில், இன்று வியட்நாம் பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வியட்நாம் பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோருக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*