மாடியில் ஒய்யாரமாய் உட்கார்ந்து மக்கள் போராட்டத்தை வேடிக்கை பார்த்த தவிசாளர்..!! (படங்கள்)
மகவாலி அபிவிருத்தித் திட்டம் எனும் பெயரில் தமிழர் நிலங்கள் பறிக்கப்பவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழுத்தும் வெய்யிலில் மக்கள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில் அதே முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள தனது அலுவலத்தில் இருந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாவலி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் தாங்கமுடியாத வெயிலின் மத்தியில் தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தி ஊர்வலமாக வந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலத்தின் முன் ஒன்றுகூடினர். அதன்போது கண்டன உரைகள் நடைபெற்றது. இவற்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தனது அலுவலகத்தின் மாடியில் காலுக்கு மேல் கால்போட்டு ஒய்யாராய் இருந்து காலாட்டியபடி நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
இதேவேளை சொகுசு வாகனங்களில் வந்திறங்கிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கண்டன ஊர்வலத்தில் பங்குபற்றாது நேராக தகரக் கொட்டகைகளுக்குள் தஞ்சம் புகுந்தமையினையும் காண முடிந்தது.