;
Athirady Tamil News

தூத்துக்குடி நசரேத் திருமண்டலத்தின் வேதாகம பாடசாலை..!! (படங்கள்)

0

தூத்துக்குடி நசரேத் திருமண்டலத்தின் பாரிய நண்பர்கள் சிறுவர் ஊழியத்தினரால் கிளிநாச்சியில் உள்ள தேவாலயத்தில் மூன்றுநாள் விடுமுறை வேதாகம பாடசாலை நடைபெற்ற வருகின்றது.

தென்னிந்திய திருச்சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த விடுமுறை வேதாகம பாடசாலை தென்னிந்தியாவின் தூத்துக்குடி திருமண்டலத்தினரால் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற வருகின்றது. திங்கட்கிழமை ஆரம்பமாகிய குறித்த விடுமுறை வேதாகம பாடசாலை இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண பேராயத்தின் பேராயர் அதி வண கலாநிதி டானியேல் செ.தியாகராஜா அவர்களும், அவரது பாரியார் தாயாளினி தியாகராஜா ஆகியோர் பார்வையட்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கினர்.

தூத்துக்குடி திருமண்டலத்திலிருந்து வருகை தந்த மதகுருமார் மற்றும் பணியாளர்கள் குறித்த விடுமுறை வேதாகம பாடசாலையை நடார்த்தி வருகின்றமை குறிப்பிடதக்கதாகும். குறித்த பாடசாலையில் வேதாகம படிப்புக்கள், பாடல், சிறார்களின் திறமைகளை வெளிக்காட்டல் என பல்வேறு கோணங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும். குறித்த பாடசாலைக்கு கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து 150மேற்பட்ட சிறார்கள் பங்குகொண்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 6 =

*