;
Athirady Tamil News

பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது..!!

0

மின்னேரிய தேசிய பூங்காவின் வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (28) காலை இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை ஹிங்குராங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவம் தொடர்பில் மேலும் 10 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்களை இன்று (29) ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − one =

*