;
Athirady Tamil News

டெஸ்ட் போட்டியை விடுங்க பாஸ்.. நிறைய சாதனைகள் காத்திருக்கு..!!

0

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி சௌதாம்ப்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது.இப்போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் எதிர் நோக்கியுள்ள சாதனைகளை பற்றிய ஒரு சிறு தொகுப்பு:

விராட் கோஹ்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்த தொடரில் சிறப்பான பார்மில் உள்ளார். அபாரமாக விளையாடி வரும் அவர் இந்த தொடரில் இதுவரை 440 ரன்களை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை 5994 ரன்களை எடுத்துள்ளார். இன்னும் 6 ரன்களை எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 10ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இஷாந்த் சர்மா: இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 249 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் 1 விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 250+ விக்கெட்களை வீழ்த்திய 7ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த அவருக்கு இன்னும் 7 விக்கெட்கள் மட்டுமே தேவை.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 557 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் இன்னும் 7 விக்கெட்களை வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகபந்துவீச்சாளர் என்கிற சாதனையை படைப்பார். ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 563 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + fourteen =

*