;
Athirady Tamil News

மாணிக்கற்கள் ஒரு தொகையுடன் சீன நாட்டவர்கள் மூவர் கைது..!!

0

சீனாவில் இருந்து ஒரு தொகை மாணிக்கற்களை சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்த சீன நாட்டவர்கள் மூவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

39 மற்றும் 27 வயதுடைய பெண் இருவரும் 37 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (28) மாலை சீனாவின் குங்மிங் நகரில் இருந்து சைனா ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான MU 713 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் இருந்து 4,681,445 ரூபா பெறுமதியான 6 கிலோ 448 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 4 கிலோ 600 கிராம் சிவப்பு மாணிக்கங்கள் இருந்தமை விஷேடமான விடயம் என சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தவிர அவற்றுள் ரூபி, நீல மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு விதமான மாணிக்கற்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 1 =

*