;
Athirady Tamil News

யுத்த நினைவு சின்னங்கள் விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே பிரச்சினை..!!

0

வடக்கில் புதிய இனக் குடியேற்றத்தை உருவாக்கும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் அண்மைய உரை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள யுத்த நினைவு சின்னங்கள் இருப்பது பிரச்சினையை ஏற்படுத்தியிருப்பது விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே என்றும் மக்களுக்கு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

வீடுகள், காணிகள், தொழிலின்மை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*