;
Athirady Tamil News

28 இலட்சம் பெறுமதியான தங்க நகையுடன் ஒருவர் கைது..!!

0

28 இலட்சம் பெறுமதியான தங்க நகை ஒன்றை சட்ட விரோதமான முறையில் எடுத்து வந்த இலங்கையர் ஒருவரை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கம்பஹா, அகரவிட பகுதியை சேர்ந்த 51 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 349 என்ற விமான நிலையத்திலேயே குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

400 கிராம் எடை கொண்ட தங்க நகை ஒன்றை மறைத்து வைத்து எடுத்து வரும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − thirteen =

*