;
Athirady Tamil News

பட்டப்பகலில் நடுவீதியில் பற்றி எரிந்த லொறி..!! (வீடியோ)

0

காலி முகத்திடலிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (29) காலை 11.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் நிறுவனம் ஒன்றில் நூடில்ஸ் விற்பனை செய்யும் லொறி ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தினால் காலி முகத்திடல் அருகில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என்பதுடன் தீ அணைப்பு படையினர் அவ்விடத்திற்கு வரும் போது குறித்த லொறி முற்றாக எரிந்து சாம்பலாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 7 =

*