;
Athirady Tamil News

10 ஆயிரம் கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை – ரிசர்வ் வங்கி அறிக்கை..!!

0

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி ரூ. 500, 1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

இதையடுத்து மக்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை பெற்றுக் கொண்டனர். ரூ.1000 நோட்டு இன்னும் வெளியிடப்படவில்லை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணத்தை மாற்றவும், புதிய நோட்டுகளை பெறவும் வங்கிகளில் காத்து கிடந்தனர். கருப்பு பணம் மற்றும் செல்லாத நோட்டுகளை ஒழிக்கவும், தீவிரவாதத்துக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கிடையே செல்லாத நோட்டு திரும்ப பெறப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையில் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதிக்கு முன்பாக ரூ.15.41 லட்சம் கோடி அளவுக்கு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில் ரூ.15.31 லட்சம் கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டு உள்ளன.

99.3 சதவீதம் அளவுக்கு செல்லாத நோட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. ரூ.10,270 கோடி அளவுக்கு பழைய நோட்டுகள் திரும்ப வில்லை.

செல்லாத நோட்டுகளை மதிப்பிடும் பணி முற்றிலுமாக வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளை சரி பார்த்தல் மற்றும் எண்ணும் பணி அதற்கான நடைமுறைப்படி துரிதமாக நடைபெற்றன. துல்லியமாகவும், நேர்மையாகவும் கணக்கிடப்பட்டன.

வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் கம்பெனிகளின் கடன்கள் ரூ. 3.76 லட்சம் கோடிக்கு உள்ளது. இவற்றை வசூலிக்க வங்கிகளுக்கு 180 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*