;
Athirady Tamil News

நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற அருள்நெறி விழா..!! (படங்கள்)

0

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நல்லை ஆதீனத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கந்தபுராண எழுச்சி அருள்நெறி விழாவின் 14 ஆம் நாள் நிகழ்வுகள் இன்று (29.08.2018) மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை நல்லை ஆதீன கலாமண்டபத்தில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.கர்ஜின் தலைமையில் நடைபெற்றன.

நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை உபபீடாதிபதி கலாநிதி நிர்மலாதேவி நல்லையா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ‘எத்துக்கு மூத்தீர்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அறநெறிப் பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் மற்றும் லண்டனில் இருந்து வருகை தந்த புண்ணியா செல்வமுருகானந்தனின் இசைக்கச்சேரி என்பன இடம்பெற்றன.

நிகழ்வில் பங்கு கொண்டு இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − nine =

*