இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு அதிஷ்டம்…..!!

இலங்கை போக்குவரத்து சபை இலாபம் பெற்று வருவதால், அனைத்து ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனை தவிர ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அத்துடன் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு சம்பள முறை ஒன்றையும் அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.