;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!!

0

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றைய தினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை(31-08-2018) கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்

அண்மைக் காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (31-08-2018) அன்று கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் காலை பத்து மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. எனவே இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 2 =

*