;
Athirady Tamil News

சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம்: பொலிஸாருக்கான பயிற்சி..!!

0

சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம்’ தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் 60 பொலிஸாருக்கான பயிற்சி ஒன்று தேசியசிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் இன்று (30-08-2018) நடத்தப்பட்டுள்ளது..

சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம் எனும் தொனிப் பொருளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சியானது காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் டீ.ஆர்.தர்மதாஸ வளவாளராக கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் மாவட்ட உதவிப்பிரதேச செயலர் ரீ. பிருந்தாகரன் தேசியசிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர் செந்தூரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + six =

*