;
Athirady Tamil News

மதூஷின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது..!!

0

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய இரண்டு சந்தேகநபர்கள் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) இரவு ஹோமாகம மற்றும் பண்டாரகம பிரதேசங்களில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பிரசேத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தன விதாரனகே மற்றும் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நிரோசன் துஷார ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து டி 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இருவரும் பிரபல பாதாள உலக குழுத்தலைவன் மாகந்துரே மதூஷின் நெருங்கிய சகாக்கள் என்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து செப்டம்பர் 04ம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவிடப்படுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 16 =

*