;
Athirady Tamil News

சங்கரன்கோவில் அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை..!!

0

சங்கரன்கோவில் அருகே உள்ள உடப்பன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது25). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3ஆண்டுகள் ஆகிறது. செந்தில்குமாரின் மனைவி மில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இது செந்தில்குமாருக்கு பிடிக்கவில்லையாம்.

இது குறித்து மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் செந்தில்குமார் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று பெருங்கோட்டூர் அருகில் உள்ள குளத்தின் கரை பகுதியில் செந்தில்குமார் வி‌ஷம் குடித்த நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேங்கடம் போலீசார் வந்து பார்த்தபோது செந்தில்குமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − four =

*