;
Athirady Tamil News

யாழில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது..!!

0

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.

தீப் பிடித்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இயந்திரப் பகுதியில் பெற்றோல் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.45மணியளவில் இடம்பெற்றது.

சாரதி, முச்சகர வண்டியை பாடசாலைக்கு முன்பாக நிறுத்திவைத்துவிட்டு பாடசாலைக்குள் சென்றுள்ளார். அவர் நிறுத்திவைத்து சுமார் 20 நிமிடங்களில் முச்சக்கர வண்டியில் தீ பரவியது எனத் தெரிவிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்த சாரதி, நீர் ஊற்றி அதனை அணைத்தார். எனினும் முச்சக்கர வண்டியின் முழுப் பகுதியிலும் தீ பரவியது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 18 =

*