;
Athirady Tamil News

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கு: கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கு கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
பொலீஸ் மா அதிபருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது

வடக்கில் அண்மைக் காலமாக் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும்இ பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும் இன்றைய தினம்(31-08-2018); ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே ! பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய் இஅரசே! பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தை வலுவாக்கு! நித்தியகலா கொலையாளிகளை விரைந்து கைது செய் தாமதியாது நீதி வழங்கு நாட்டில் கேள்விக்குள்ளாகிறது சிறுமிகள் பெண்களின் பாதுகாப்பு. சட்டவிரோத போதை பொருள் பாவனையாளர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை வேண்டும் வழங்கும் தண்டனைகள் வருங்காலத்தில் குற்றங்களை தடுக்க வழி செய்ய வேண்டும். வேண்டும் வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் வழங்கு வழங்கு சட்டத்தின் பாதுகாப்பை பெண்களுக்கு வழங்கு பெண்களை பாதுகாக்க சமூகமே விழித்துக்கொள் ! எங்கள் பெண்களுக்கு ஏன் இந்த நிலை? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்
பெண்களுக்கான பாதுகாப்பின்மை என்பது சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலே வளர்ச்சியடைகிறதா என்று அச்சமடையவேண்டியுள்ளது. இதன் அண்மைய வெளிப்பாடே பரந்தன் பகுதியில் கொல்லப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கறுப்பையா நித்தியமலரின் படுகொலையாகும். சிறுசிறு பிரச்சினைகளை வன்முறை வழியில் கையாளமுற்படும் அபாயகரமான போக்கு எமது சமூகத்தில் தலையெடுப்பதை இந்தச் சம்மவம் உணர்த்துகின்றது. பெண்களுடனான உறவு மற்றும் பாலியல் ரீதியான விடயங்களை வன்முறைஇ கொலை மூலம் மிகச் சாதாரணமாகக் கையாள முற்படும் போக்கு உச்ச கட்டமாக உள்ளது. இதனால் பெண்கள் பெரும் உள நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். தமது பாதுகாப்புத் தொடர்பாகவும் கௌரவம்இ எதிர்காலம் பற்றியும் கவலையடைந்திருக்கின்றனர்.

யுத்தத்தினால் அதிக பாதிப்பிற்குள்ளாகிய பெண்கள் தனித்தும் ஆதரவற்றும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் சூழலில் பல நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் நிர்ப்பந்தங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். திலே கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். வறுமைஇ உழைப்புச் சுரண்டல் பாலியல் துன்புறுத்தல்கள் பழிவாங்கல்கள் என பல முனைகளிலும் நெருக்கடிகள் பெண்கள் மீது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது வெளியில் அதிகம் பேசப்படாத விவகாரமாக இருக்கின்றது.

இவற்றின் உச்சக்கட்ட வன்முறையாக கடந்த சில நாள்களில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் இளம் பெண்கள் மீதான அத்துமீறல்களும் வன்முறைகளும் கொலைகளும் அதிகரித்திருக்கின்றன. உடையார்கட்டில் உயர்தர வகுப்பு மாணவி கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்கு முன்னதாக கிளிநொச்சியில் இளம் தாயொருவர் கடத்தித் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இது எமது சமூகத்தில் மறைந்திருந்த வக்கிர உணர்வினதும் மனித விழுமியங்களுக்கு முரணான சிந்தனையினதும் வெளிப்பாடாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. இதனை சமத்துவம்இ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆகவே இத்தகைய பெண்களுக்கெதிரான அபாய நிலைகளைத் தடுத்துப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசினுடைய முதற் பொறுப்பாகும். அதேவேளை இதனைக் கவனத்திற் கொண்டு சமூகப் பாதுகாப்பிற்குரிய விழுமியங்களைப் பேணுவதும் பெண்களுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்துவதும் தமிழ்த்தரப்பினருடைய கடமையாகும். இதில் சமூகச் செயற்பாட்டியக்கங்கள் தொடக்கம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பங்குண்டு. அவற்றைச் செய்வதற்கு அனைவரும் முன்வந்த செயற்பட வேண்டும். துயருற்ற மக்களின் கண்ணீரைத் துடைப்பதோடு சமூகத்தையும் தனியொருவரையும் பாதுகாக்க வேண்டியதும் நமது கடமையாகும் என்பதே சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் கருத்தாகும்.

தனியொருவரின் பாதுகாப்பே சமூகத்தின் பாதுகாப்பாகும். அதில் பெண்களின் பாதுகாப்பே எதிர்காலத்தின் உறுதிப்பாட்டை உருவாக்கும். எந்த வன்முறையையும் எதிர்ப்போம். பெண்களைக் காப்போம். எனவும் தெரிவித்தார்.

ஆர்பாட்டத்தின் இறுதியில் டிப்போச் சந்தியிலிருந்து கிளிநொச்சி பொலீஸ் நிலையம் நோக்கி சென்றவர்கள் அங்கு பொலீ்மா அதிபருக்கான கோரிக்கைகள் அடங்கயி மகஜர் ஒன்றை சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சரிடம் கையளிக்கப்பட்டது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 7 =

*