;
Athirady Tamil News

15 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இந்தியர் கைது..!!

0

15 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் இணைந்து சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்துள்ள சந்தேகநபரிடம் இருந்து சுமார் 20கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதாக பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*