;
Athirady Tamil News

தாலி கட்டிய ஒரு மணி நேரத்திலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்த மணப்பெண்:.. நடந்தது என்ன??..!! (வீடியோ)

0

ஒரு கல்யாண மாப்பிள்ளை தாலி கட்டிய ஒரு மணி நேரத்திலேயே அதிர்ச்சியடைந்து உறைந்தார். கொஞ்ச நேரத்தில் மயக்கமே போட்டுவிட்டு கீழே விழுந்து விட்டார்.. ஏன்..ஏன்..ஏன்? வாங்க பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், மயிலம்பாடியை சேர்ந்தவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு ரொம்ப நாளா கல்யாணமே ஆகாமல் இருந்தது. எத்தனையோ இடங்களில் பெண் பார்த்தும் எதுவுமே சரவணனுக்கு செட் ஆகல.

வயது வித்தியாசம்
வயது வித்தியாசம்
கடைசியில் ஒரு தரகரை பிடித்து, அதன்மூலம் 2 வாரத்துக்கு முன்னாடிதான் சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் ஒரு பெண்ணை பார்த்து பேசி முடிக்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு வயசு 17. சரவணனுக்கு 35. ரெண்டு பேருக்கும் இவ்ளோ வயசு வித்தியாசமா இருக்கே என்று பெண்ணின் வீட்டில் கொஞ்சம் யோசித்தனர். பிறகு சம்மதித்துவிட்டனர்.

மாப்பிள்ளை சரவணன்
இதையடுத்து நேற்று முன்தினம் கொளத்தூரிலேயே ஒரு கோயில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் கல்யாணம் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. மணமேடையில் சரவணன் மாப்பிள்ளை கோலத்தில் புன்னகை பூக்க உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது மணப்பெண்ணை மணமேடைக்கு கூட்டிவந்தனர். அப்போது மணப்பெண் நடந்து வரும்போது பெண்ணின் வயிறு பெரிசா இருந்தது.

வயிறு பெரிசா இருக்கே?
பெண் மணமேடை நோக்கி நடந்து கொண்டிருப்பதை மாப்பிள்ளை சரவணன் பார்த்துவிட்டார். அப்போது பக்கத்தில் இருந்த பெண் வீட்டாரிடம், “என்ன, பெண்ணுக்கு வயிறு பெரிசா இருக்கற மாதிரி இருக்கே?” என்று சந்தேகமாக கேட்டார். அதற்கு பெண் வீட்டார்கள், “அவள்.. காலைலயே அதிகமாக சாப்பாடு சாப்பிட்டுட்டா.. அதனால்தான் வயிறு பெரிசா இருக்கு” என்றனர்.

வயிறு வலிக்குதே…
மணமகளும் சரவணன் பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டார். மந்திரங்கள் ஓதப்பட, சரவணன் அந்த பெண்ணுக்கு தாலி கட்டினார். திருமணம் ஆகி ஒரு மணி நேரம் முடிந்திருந்தது. மேடையில்தான் இருவரும் உட்கார்ந்திருந்தனர். அப்போது திடீரென பெண்ணிடமிருந்து அலறல்… “ஐயோ… வயிறு வலிக்குதே” என்று வயிற்றைப்பிடித்து கொண்டு அழுதார்.

ஆறுதல் கூறிய சரவணன்
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு மணப்பெண்ணை கூட்டிச் சென்றனர். கூடவே மாப்பிள்ளை சரவணனும் பெண்ணுக்கு பக்கத்தில் துணையாகவும், ஆறுதலாகவும் ஆம்புலன்சில் உட்கார்ந்து கொண்டார். மருத்துவமனை செல்லும் வரை பெண்ணுக்கு ஆறுதல் கூறிக் கொண்டே வந்தார் சரவணன்.

பிரசவ வார்டில் மணமகள்
மருத்துவமனைக்குள் மணப்பெண் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, உடனடியாக டாக்டர்களும் அவரை பரிசோதித்தனர். அப்போது டாக்டர்கள், “ஓகே… நல்ல நேரத்துலதான் கூட்டிட்டு வந்திருக்கீங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில குழந்தை பிறந்திடும், பிரசவ வார்டுக்கு சீக்கிரமா போங்கள்… நாங்க பின்னாடியே வர்றோம்” என்றனர். இதைக்கேட்ட அங்கிருந்த மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சரவணன் மயக்கமே போட்டுவிட்டார். கொஞ்ச நேரத்தில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது (கங்கிராட்ஸ்!).

அவமானத்தில் பெண்வீட்டார்
மயக்கம் தெளிந்த சரவணன், தன்னை இப்படி ஏமாத்திட்டாங்களே என்று அழ ஆரம்பித்துவிட்டார். சரவணனை சமாதானம் செய்த சொந்தபந்தங்கள், சரவணனை கூட்டிக் கொண்டு தங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தனர். மகள் கர்ப்பமாக இருப்பது பெண்ணின் பெற்றவர்கள் முதற்கொண்டு யாருக்குமே தெரியவில்லை என்பதால் பெண்வீட்டார் அவமானத்தில் புழுங்கிப் போயுள்ளனர். ஆனாலும் பெற்றவர்களுக்குகூட மகளை பற்றி தெரியாமல் போனதும், தெரிந்து வைத்துக் கொள்ளாமல் போனதும் அதிர்ச்சியாக உள்ளது.

சரவணனுக்கு தண்டனை
இதுகுறித்து கொளத்தூர் போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். தன்னை இப்படி ஏமாற்றி மோசம் செய்தது யார்? என்று மணப்பெண் சொல்லவே மறுக்கிறார். இருந்தாலும் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரை தேடி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக சரவணன் மீதும் நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் அப்பாவி சரவணனுக்கு மணப்பெண் கொடுத்த தண்டனையைவிட பெரிய தண்டனையை வேறு என்ன இருக்க முடியும்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*