;
Athirady Tamil News

நேபாளத்தின் பிரபல பசுபதி நாதர் ஆலய யாத்திரீகர்கள் விடுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!

0

வங்ககடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்காளதேசம், பூடான் மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக பிம்ஸ்டெக் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பாக பிரதமர் மோடி பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஓலியை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் இந்தியா மற்றும் நேபாளம் இடையே, பிகார் மாநிலம் ராக்சாவுல் நகரில் இருந்து காத்மாண்டு வரை ரெயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து, நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்தில் இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்டுள்ள 400 படுக்கையறை வசதி கொண்ட யாத்திரீகர்கள் விடுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

விடுதி திறப்பு விழாவில் பேசிய மோடி, இந்த விடுதி யாத்திரீகர்களுக்கான ஓய்வு விடுதியாக மட்டும் இல்லாமல், சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் விடுதியாகவும் இருந்து இந்தியா – நேபாள நாடுகளுக்கு ஒரு இணைப்பாக இருக்கும். நேபாளத்தில் உள்ள லும்பினியில் சித்தார்த்த கௌதமர் பிறந்தது போல இந்தியாவின் புத்த கயாவில் புத்தர் பிறந்தார் (ஞானம் பெற்றார்) என்று இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்று உறவுகள் குறித்து அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடி காத்மாண்டுவில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + one =

*