;
Athirady Tamil News

சோவியத் யூனியனில் இருந்து உஸ்பெகிஸ்தான் விடுதலையான நாள்: 01-09-1991..!!

0

உஸ்பெகிஸ்தான் நாடு ஆசியாவில் உள்ள ஒரு நிலங்களால் சூழ்ந்துள்ள நாடாகும். இந்நாடு முன்பு சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது. 1991-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி சோவியத் யூனியனில் இருந்து விடுதலை பெற்றது. இதன் வடக்கிலும் மேற்கிலும் கஜகிஸ்தானும் கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகியன கிழக்கிலும் ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகியன தெற்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1902 – முதலாவது அறிவியல் புனை திரைப்படம்பிரான்சில் திரையிடப்பட்டது.

* 1914 – ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

* 1923 – டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பலியானார்கள்.

* 1939 – இரண்டாம் உலகப்போர்: நாசி ஜெர்மனி போலந்தை தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.

* 1951 – ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டன.

* 1969 – அல் கடாபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

* 1970 – ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

* 1972 – ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி பிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலக கோப்பையை வென்றார்.

* 1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*