;
Athirady Tamil News

வட்டுக்கோட்டையைக் கலக்கும் விசித்திர நாய்…..!

0

நாய்க்குப் பயந்த நபர் ஒருவர் வேலிக்குள் சைக்கிளைச் செருகிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இரவு வேளைகளில் வட்டுக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றின் முன்னால் உள்ள வீதியில் நாய் ஒன்று படுத்திருப்பதாகவும், அந்த வழியாக செல்வோரை குறித்த நாய் குரைத்தபடி விரட்டிச் செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவர் அவ்வழியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வேலியோரம் மறைந்திருந்த நாய் திடீரென்று பெரும் சத்தமாக குரைத்தபடி எழுந்துள்ளது.

எதிர்பாராதவிதமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் வெலவெலத்துப்போன குறித்த இளைஞர் பதறியடித்து சைக்கிளை ஓட்டியுள்ளார்.நாய் குரைத்தபடி அருகில் வந்ததும் நாயைத் திரும்பிப்பார்த்தவாறே சைக்கிளை செலுத்தியபோது அருகிலுள்ள கிடுகு வேலி ஒன்றுடன் மோதியுள்ளார்.

இதனால் சைக்கிள் முன்பகுதி வேலியைப் பிரித்து உள்ளே சென்றதுடன் குறித்த நபரின் முகம் மற்றும் கையிலும் சிறு கீறல் காயங்கள் ஏற்பட்டதாக எமது பிரதேச செய்தியாளர் குறிப்பிட்டார்.இதன்பின்னர் குறித்த நபர், நாய் படுத்திருந்த பகுதியிலுள்ள வீட்டுக்காரரை கூப்பிட்டு ஏசியபோதும் அது தமது நாய் இல்லை என அவர்கள் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது குறித்து பொதுமகன் ஒருவர் கூறும்போது, வேலி ஓரமாக அமைதியாகப் படுத்திருக்கும் அந்த நாய், வீதியில் யாராவது வந்தால் திடீரென்று சிங்கம்போல எழுந்து பாய்ந்து பாய்ந்து விரட்டிச் செல்வதாக விபரித்தார்.

எவ்வாறாயினும் விசித்திர குணம் கொண்டதாகக் காணப்படும் அந்த நாய் இதுவரை யாரையுமே கடித்ததில்லை எனக் கூறும் அவர், விளையாட்டுக்காக அந்த நாய் அப்படி நடந்துகொள்ளலாம் எனவும் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 7 =

*