;
Athirady Tamil News

வெள்­ள­வத்­தையில் ஒரே இரவில் மூன்று கொள்ளை சம்பவங்கள்

0

வெள்­ள­வத்­தையில் ஒரே இரவில் இரண்டு வீடு­க­ளிலும் அலு­வ­ல­க­மொன்­றிலும் இரண்டு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய தங்க நகைகள் உள்­ளிட்ட பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.

கடந்த 26 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கும் 27 ஆம் திகதி காலை 7.30 மணிக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தி­யி­லேயே இந்த கொள்ளைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இச்­சம்­ப­வங்கள் குறித்து வெள்­ள­வத்தை பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்ட முறைப்­பாட்­டை­ய­டுத்து குற்­றத் ­த­டுப்பு பிரிவு பொலி­ஸாரால் விசா­ர­ணைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன. ஒரே இரவில் இடம்­பெற்ற இக்­கொள்ளைச் சம்­ப­வங்­க­ளினால் பிர­தே­ச­வா­சிகள் மத்­தியில் பெரும் அச்­ச­நி­லைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

வெள்­ள­வத்தை மாயா மாவத்தை பகு­தியில் காணப்­படும் தனியார் காரி­யா­ல­ய­மொன்­றி­லி­ருந்து ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய பொருட்கள் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன. கடந்த 26 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு குறித்த காரி­யா­ல­யத்தின் உரி­மை­யாளர் காரி­யா­ல­யத்தை விட்டு வீடு திரும்­பி­யுள்ள நிலையில் 27 ஆம் திகதி காலை பணிக்கும் திரும்­பிய காரி­யா­லய உத­வி­யாளர் ஒரு­வ­ரினால் காரி­யா­ல­யத்தில் காணப்­படும் அனைத்து கோப்­பு­களும் இழுத்­துப்­போ­டப்­பட்டு காணப்­ப­டு­வ­தாக உரி­மை­யா­ள­ருக்கு தொலைப்­பே­சியில் தகவல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இத் தொலைப்­பேசி அழைப்­பை­ய­டுத்து காரி­யா­ல­யத்­துக்கு விரைந்து வந்த உரி­மை­யா­ள­ரினால் காரி­யா­ல­யத்தில் முத­லா­வது தளத்தில் காணப்­படும் அனைத்து கோப்­பு­களும் இழுக்­கப்­பட்­டி­ருந்­தமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­போது உரி­மை­யா­ள­ருக்கு எழுந்த சந்­தே­கத்தில் இரண்­டா­வது தளத்­தி­லுள்ள உரி­மை­யா­ளரின் அறையின் அலு­மா­ரியை சோத­னை­யிட்ட போது அலு­மா­ரியில் காணப்­பட்ட பாது­காப்பு பெட்­ட­கத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு கோடியே 6 இலட்­சத்து 90 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள் சூறை­யா­டப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, வெள்­ள­வத்தை பொலிஸில் கடந்த 27 ஆம் திகதி காலை முறைப்­பா­டொன்றை உரி­மை­யாளர் பதி­வு­செய்­துள்ளார்.

இம்­மு­றைப்­பாட்டின் அடிப்­ப­டையில் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில், காரி­யா­ல­யத்தில் காணப்­பட்ட சி.சீ.டி.வி. கம­ராக்­களின் பதி­வு­களும் திரு­டப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் இது­வ­ரையில் காரி­யா­ல­யத்தின் பணி­யா­ளர்கள் 10 பேரிடம் வாக்­கு­மூலம் பதி­யப்­பட்­டுள்ள நிலையில், சம்­பவம் தொடர்பில் இது­வ­ரையில் எவரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை.

இதேபோல், வெள்­ள­வத்தை வொஸ்வெல் பிளேஸில் அமைந்­துள்ள தொடர்­மாடி வீட்டுத் தொகு­தி­யொன்றில் உள்ள வீடொன்­றி­லி­ருந்தும் ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான பெறு­ம­தி­கொண்ட தங்க நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.

கடந்த 27 ஆம் திகதி அதி­காலை 3.30 மணி­தொ­டக்கம் காலை 5 மணிக்­கி­டைப்­பட்ட காலப்­ப­கு­தியில் வீட்டின் உள்­ள­றையில் பயணப் பொதி­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான பெறு­ம­தி­கொண்ட திரு­மண நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

தமது மகளின் திரு­மண நிகழ்­வுக்­காக வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­தி­ருந்த இவர்கள் இந்த வீட்­டினை வாட­கைக்கு எடுத்து தங்­கி­யி­ருந்­துள்­ளனர். 27 ஆம் திகதி அதி­காலை 1 மணி­ய­ளவில் குறித்த வீட்­டுக்குள் வந்த இவர்கள் பய­ணப்­பை­களை உள்­ள­றையில் வைத்து விட்டு மகளும் தாயும் அதே அறை­யிலும் தந்தை வீட்டின் முன்­ன­றை­யிலும் நித்­தி­ரைக்கு சென்­றுள்­ளனர்.

இவர்கள் அன்று காலை 8 மணி­ய­ளவில் நித்­திரை விட்­டெ­ழுப்பி தமது உடை­மைகள் காணப்­பட்ட பயணப்­பொ­தி­களின் பூட்டு உடைக்­கப்­பட்டு ஆடைகள் வெளியே வீசப்­பட்டு காணப்­பட்­ட­மையை அவ­தா­னித்­துள்­ளனர்.

இதைப் பார்த்து கல­வ­ர­ம­டைந்த குடும்­பத்தார் நகைகள் வைக்­கப்­பட்­டி­ருந்த பெட்­டி­யினை சோத­னை­யிட்ட போது அதில் காணப்­பட்ட தங்க நகைகள் அனைத்தும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளதை அவ­தா­னித்­துள்­ளனர்.

இதை­ய­டுத்து சம்­பவம் தொடர்பில் 27 ஆம் திகதி பொலிஸில் முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் வெள்­ள­வத்தை நெல்சன் பிளேஸ் பகு­தியில் அமைந்­துள்ள இன்­னு­மொரு தொடர்­மாடி வீட்­டிலும் இதே இரவு கொள்ளைச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­ப­வத்தின் போது குறித்த வீட்­டி­லி­ருந்து 2 லட்­சத்து 57 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன.

வீட்டின் உரி­மை­யாளர் தனியார் நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­யாற்­றி­வரும் நிலையில் மாலை வீடு திரும்­பி­ய­இவர் இரவு உணவின் பின் 11 மணி வரையில் தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்து விட்டு உள்­ள­றையில் நித்­தி­ரைக்கு சென்­றுள்ளார். இவ­ருடன் மனை­வியும் குழந்­தையும் உறங்­கி­யுள்­ளனர்.

இதன்­போது 27 ஆம் திகதி அதி­காலை வீட்டின் சமை­ய­ல­றையின் ஜன்­னல்­களை திறந்து உள்ளே வந்த கொள்­ளை­யர்­க­ளினால் இரண்­டா­வது அறையில் காணப்­பட்ட அலு­மா­ரியை உடைத்து 2 இலட்­சத்து 57 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

அதிகாலை வேளையில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த வீட்டின் உரிமையாளரினால் சமையலறை ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டு வீட்டின் அறைகள் பரிசோதிக்கப்பட்ட வேளையிலேயே இவ்வாறு திருடுப் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலும் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், ஒரே இரவில் வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இம்மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 6 =

*