;
Athirady Tamil News

ஒரு தொகை போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!!

0

சுமார் 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் கடவத்தை. மங்கட வீதி பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 740 கிராமும் 145 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சந்தேகநபரிடமிருந்து 02 இலட்சத்து 33,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*