;
Athirady Tamil News

வடக்கு மாகாண சபை அமர்வுகளை மக்கள் உன்னிப்பாக பார்க்க வேண்டும்..!!

0

வடக்கு மாகாண சபை அமர்வுகள் இறுதி அந்தலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் 130ஆவது அமர்வு இடம் பெற்றது.

வடக்கு மாகாண சபையின் அமர்வுகளை சில தொலைக்காட்சி சேவைகள் நேரடியாக ஒளிபரப்புகின்றன.

இவ்வாறு ஒளிபரப்பப்படுவதை எங்கள் மக்கள் பார்க்க வேண்டும். அங்கு எப்படியயல் லாம் பேசுகிறார்கள், கதைக்கிறார்கள் என் பதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.
வடக்கு மாகாண சபையின் அமர்வுகளைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சரை எதிர்ப்பதையே தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அதில், தமிழினத்தை வேரறுக்க வேண்டும் என்று இன்றுவரை உறுதியாக இருக்கின்ற; வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களுடன் சேர்ந்து நிற்கின்றவர்கள் முதன்மையானவர்கள்.

அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற பெயரில் வடக்கு மாகாண சபையில் இருக்கும் முஸ்லிம் உறுப் பினர் ஒருவர் முதலமைச்சரை எதிர்த்து அதன் மூலம் தமிழினத்தை சிதைக்கக் கடுமையாகப்பாடுபடுகிறார்.

இவற்றுக்கெல்லாம் கெளரவமாகவே இடம் கொடுக்கப்படுவதைப் பார்க்கும்போது, அடுத்து வரும் மாகாண சபை அமர்வுகள் முதலமைச் சர் என்று ஒருவர் இல்லை என்பதுபோல நினைத்து சபையை நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

எனவே வடக்கு மாகாண சபையின் இத் தகைய போக்குகளை தமிழ் மக்கள் நிச்சய மாக அவதானித்து தங்களின் தீர்ப்புரைகளை எழுதுவதற்குத் தயாராக வேண்டும்.

தவிர, முதலமைச்சரை எதிர்த்து வடக்கு மாகாண சபையின் நேரத்தையும் காலத்தை யும் வீணடிப்பவர்கள் தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவுவதாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவன்று.

மாறாக வடக்கு மாகாண சபையில் இருந்து கொண்டு முதலமைச்சருக்கு எதிராகச் செயற் படுபவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை – இலங்கைத் தமிழரசுக் கட்சியை சாகடிக் கின்றனர் என்பதே உண்மை.

ஆம், வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் விக் னேஸ்வரன் தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் தலைமையை உருவாக்கி அதில் நீதியான; நேர்மையான, தமிழ்ப்பற்றாளர்களை இணைத் துக் கொண்டு களமிறங்கினால், நாங்களே அரசியல் தலைமை என்று கூறுபவர்கள் இரு ந்த இடம் தெரியாமல் போகவேண்டி வரும்.

இதனை உணராதவர்கள்தான் இவர்கள் என்றால் அவர்களால்தான் கூட்டமைப்புக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஆபத்தானவர்கள் என்பதையாவது புரிந்து கொள்வதற்கு கூட்டமைப் பின் தலைமையில் யாரேனும் இருப்பார்களா? என்பதுதான் தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 1 =

*