;
Athirady Tamil News

புகையிலை உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பில்லை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்..!!

0

உழவர்களுடன் உறவு பாலம் அமைக்கும் விவசாய அமைச்சர் விவசாயிகள் விரக்தியுறா வண்ணம் செயற்பாடுகள் அமைய குரல் கொடுப்பேன்.

புகையிலை செய்கையாளர்களுக்கு பாதிப்பில்லை

யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் உருளைக்கிழக்கு செய்கை பண்ணும் கமக்கார அமைப்புக்களினால், விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 31/08/2018 அன்று நீர்வேலி கரந்தன் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.

யாழ் மாவட்ட புகையிலை செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு பாதிப்பில்லை பிரதி அமைச்சர் தெரிவிப்பு
யாழ்மாவட்டத்தில் பணப்பயிரான புகையிலை செய்கையில் ஈடுபடுகின்ற விவசயிகளுக்கு மாற்று பயிர் அறிமுகம்ப்படுத்தும் வரை அவர்கள் தமது புகையிலை செய்கையினை செய்யலாம் என்று கரந்தன் விவசாய சம்மேளன விவசாயிகளுடனான சந்திப்பில் தெரிவித்தார் இது தொடர்பாக விவசாய அமைச்சர் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் கலந்துரையுள்ளதாகவும் அவர்கள் இதற்கான மாற்று பயிரினை அறிமுகப்படுத்தி ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்த பின்னர் மாத்திரமே புகையிலை செய்கையினை தடை செய்வதாகவும் தெரிவித்தார்.

மாற்றீடு பயிர் செய்கை குறித்தும் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.அவர் அதன் போது நமது வாழ்வாதராத்திற்கு பெரும் துணையாக காணப்பட்ட பணப்பயிர் செய்கையாளர்களின் மாற்று பயிர் செய்கை குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுது இளைஞர்களின் வேலையில்லா பிரைச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்ள விவசாயம் மாற்றீடாக அமைய வேண்டுமே தவிர விவசாயத்தை தவிர்ப்பவர்காளாக இல்லாமல் செய்ய, பல்வேறு நலத் திட்டங்கள் அமைச்சினால் செயற் திட்டங்கள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.சுகாதார நலன் கருதியதாக பணப்பயிர் செய்கை காணப்பட்டாலும் விவசாயிகள் விரக்தியுறும் வகையில் செயற்பாடுகள் அமைய விவசாயிகளுக்காக குரல் கொடுப்பேன் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன் பொழுது கமக்கார அமைப்புக்களின் தலைவர்களினால் மகிழ்ச்சி கருத்துக்களும் பிரதி அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

குப்பிளான்,உடுவில்,அச்சுவேலி,கோப்பாய், நீர்வேலி பிரதேச உருளைக்கிழங்கு உற்பத்தி செய்கையாளர்கள் கலந்து கொண்டு பிரதி அமைச்சரை கௌரவித்ததோடு,விவசாய உற்பத்தி செய்கை குறித்த கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.

நாடாளமன்ற உறுப்பினராக இருந்த பொழுது உருளைக்கிழங்கு விதையை மானியமாக பெற்று தந்தமைக்கு நன்றி பாராட்டியதோடு,இன்று விவசாய பிரதி அமைச்சரராக உருளைக்கிழங்கு அறுவடை காலங்களின் போது இறக்குமதிக்கான வரி விதிப்புக்களுக்காக குரல் கொடுத்தமைக்கும் நமது உழவர்களோடு உறவு பாலம் அமைக்கும் விவசாய பிரதி அமைச்சரின் தொடர் பயணங்களோடு இணைந்து கொள்ள,பாரிய விவசாய மாற்றங்களை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நவீன மாற்றங்களுகேற்ப அயல் இந்திய தேசத்தில் முன்னெடுக்கப்படும் செய்கையை அறிமுகம் செய்வதற்கும்,உற்பத்தி சார்ந்த சந்தையையும்,சந்தை சார்ந்த உற்பத்தியை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் பிரதேச ரீதியாக தனித்துவமான தரமான விளைபொருட்கள் விளையக்கூடியதாக காணப்படுகின்றதெனவும் அதன் தரத்தை கொண்டு சிறந்த செய்கைகளை மேற்கொள்ள கூடிய பயிர் வகைகளை செய்கை பண்ண, மண் வளம் குறித்து ஆராய,மண் ஆராய்ச்சி பஸ் வண்டி ஒன்றை கொள்வனவு செய்ய கவனம் செலுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*