;
Athirady Tamil News

மகனின் பிரச்சினையை தீர்க்க சென்ற தாய் பலி..!!

0

தலங்கம, ஹோகந்தர பிரதேசத்தில் தனது மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தீர்ப்பதற்கு சென்ற தாய் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த தாய் தனது இளைய மகனுடன் காணியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு ஒரு குழுவுடன் வந்த மூத்த மகன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மோதலை தீர்க்க முயற்சித்த தாய் மீது கத்தி குத்து தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ள மூத்த மகன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தலங்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் இரண்டு மகன்களையும் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 1 =

*